நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆய்வறிக்கை சமர்ப்பித்தது.
நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவர் கனவும், எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருன்கிறன.
இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது.
இதனையடுத்து, நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் என இக்குழு அறிவித்திருந்தது.
சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஏ.கே.ராஜன் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீட் தேர்வின் தாக்கம் குறித்த ஆய்வறிக்கையை சமர்பித்தனர்.