முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிய வந்துள்ளது, இதானால் முன்னாள் அமைச்சரின் வங்கி கணக்கு முடக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னாள் போக்குவரத்துத்துறை எம்.ஆர் விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியின் போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 26 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர்.
இந்த சோதனையொல் ரூ 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர்.
மேலும், விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்,எம்.ஆர்.விஜய பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55 % சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதாவது,2016 ஆம் ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து மதிப்பு இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது.
இதனால்,அடுத்த கட்டமாக முன்னாள் அமைச்சரின் வங்கி லாக்கரையும் சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.