உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் முதியவர் தாக்கப்பட்ட வீடியோ தொடர்பான விவகாரத்தில், டுவிட்டரின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
காஜியாபாத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை, மர்ம நபர்கள் அடித்து, உதைத்து தாடியை மழித்தது போன்ற வீடியோ டுவிட்டரில் வைரலானது.
இது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதாக டுவிட்டர், பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக பதிலளிக்க டுவிட்டரின் இந்திய தலைவர் மணிஷ் மகேஷ்வரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் காவல்துறை இமெயில் வாயிலாக கேள்வி எழுப்பியிருந்தும் மணிஷ் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக விசாரணையை எதிர்கொள்வதாக மணிஷ் மகேஷ்வரி கூறியுள்ளார். மகேஸ்வரியின் இந்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என கூறி, 2வது முறையாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது