ஆப்கானிஸ்தனை கைப்பற்றியுள்ள தலிபான்கள் தன்னை கொல்வதற்காக காத்திருப்பதாக அந்நாட்டின் முதல் பெண் மேயர் கூறியுள்ளது, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை வேகமாக தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். நேற்றைய தினம் காபூலில் உள்ள அதிபர் மாளிகையையும் கைப்பற்றியுள்ளனர். பெண்களை அடிமைகளாக கருதும் தலிபான்களின் ஆட்சியில் மக்கள் இருப்பின் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்க நேரிடும் என உலக தலைவர்கள் பலரும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயரான ஜரிஃபா கஃபாரி கூறியுள்ளது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
தலிபான்கள் தன்னை வந்து கொல்வதற்காக காத்திருக்கிறேன், தான் எங்கும் ஓடி ஒளியவில்லை, இங்கே தன்னுடைய கணவருடன் உட்கார்ந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
என்னை காப்பாற்ற என் குடும்பம் அருகில் இல்லை, என்னை போன்றவர்களை தான் தலிபான்கள் முதலில் கொல்வர் எனவும், தன்னுடைய மரணத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் பேசியுள்ளார். 27 வயதான ஜரிஃபா கஃபாரி ஆப்கானிஸ்தானின் முதல் பெண் மேயராக கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.