அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் வீழ்ச்சியடைந்ததை அடுத்து ஆசியாவின் 2ஆவது பணக்காரர் என்ற அந்தஸ்தை கவுதம் அதானி இழந்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்ததையடுத்து, இவர் இந்தியாவிலும், ஆசியாவிலும் இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார்.
மேலும் உலகளாவிய பணக்காரர் பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்தார்.என்.எஸ்.டி.எல்., எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம் அதானி நிறுவனங்களில் அதிக முதலீடுகளை கொண்ட மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை முடக்கியதால் அதானி நிறுவனங்களின் பங்குகள் திடீர் சரிவை சந்தித்தது.
இதனால் 7 ஆயிரத்து 700 கோடி டாலர்களாக இருந்த அவரது நிகர சொத்து மதிப்பு, 6 ஆயிரத்து 300 கோடி டாலர்களாக குறைந்தது. இதனால் ஆசியாவின் 2ஆவது பணக்காரர் என்ற அந்தஸ்தை கவுதம் அதானி இழந்துள்ளார். அதானியின் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தொழிலில் ஈடுபட்டுள்ள சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் பிடித்துள்ளார்.