மும்பை சர்வதேச விமான நிலையம் , அதானி விமான நிலையம் என மாற்றியதற்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மும்பை சர்வதேச விமான நிலையம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி குழுமம் கைப்பற்றியது.
இதையடுத்து அதானி விமான நிலையம் என்ற எழுத்து பலகை வளாகத்தில் பொறிக்கப்பட்டன. இதனால் கடுப்பான சிவசேனா தொண்டர்கள், அதானி விமான நிலையம் என்ற பெயர் பலகையை அடித்து நொறுக்கினர்.
மேலும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் பெயர் மாற்றப்படுவதை ஏற்க மாட்டோம் என்று சிவசேனா கட்சியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்