பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

SHARE

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார்.

தென்னிந்திய சினிமாவின் 1960 முதல் 80 வரையிலான காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெயந்தி.

‘எதிர்நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’, ’அன்னை காளிகாம்பாள்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில அரசு விருதுகளை வென்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில், 76 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலை பெங்களூருவில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மெர்சிடீஸ் பென்ஸ் காரை வாங்கிய நடிகர் ரன்வீர் சிங்

Admin

கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

யுவன் பிறந்தநாள் கொண்டாட்டம்… பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ்..

Admin

மன அழுத்தத்தில் இருந்து பலரையும் மீட்ட பாடல்: சந்தோஷ் நாராயணன் பெருமை

Admin

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

நடிகர் அமீர்கான்-கிரண் ராவ் விவாகரத்து குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு..!!

Admin

Leave a Comment