பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் மலையாள நடிகை அனுபமா தேர்ச்சி பெற்றதாக மார்க் ஷீட் ஒன்று வைரலாகி வருகிறது.
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஆனால் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது.
தற்போது அது வெளியிடப்பட்ட நிலையில், ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் பட்டியலில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்த மார்க் ஷீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடத்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பொறியியல் துறையின் தகுதிப்பட்டியலில் இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் தவறுதலாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.