பாலிவுட்டின் பிரபல நடிகர் ஆமீர்கான் தன் மனைவி கிரண் ராவுடன் லடாக் மக்களின் பாரம்பரிய உடையணிந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமீர்கான் தனது சொந்த தயாரிப்பில் ”லால் சிங் சத்தா” என்ற இந்தி படத்தை உருவாக்கி வருகிறார். இதன் படப்படிப்பு லடாக்கின் வாகா கிராமத்தில் நடைபெற்று வருகிறது. ஆமீர் கானை பார்த்த லடாக் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து லடாக் மக்களின் கோரிக்கையை ஏற்று படப்படிப்பு தளத்தில் ஆமீர் தன் மனைவியுடன் லடாக் மக்களின் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்