தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே இரட்டை குழந்தைகளுக்கு தாயான அந்நாட்டைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்திருந்தார்.
அவருக்கு கடந்த ஜூன் 7ஆம் தேதி பிரசவ வலி ஏற்படவே பிரிட்டோரியா நகரி்ல் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் 7 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
மேலும் தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் கடந்த மே மாதம்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி பகுதியில் 25 வயதுள்ள ஹலீமா சிஸே என்ற பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றது தான் சாதனையாக இருந்தது. அதனை கோஷியாமி தமாரா சித்தோல் தற்போது முறியடித்துள்ளார்.
– மூவேந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்