Money Heist வெப் சீரிஸை பார்ப்பதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற மணி ஹெய்ஸ்ட் வெப் சிரீஸ் கடந்த 2020 லாக்டவுனில் இதன் 4வது பாகம் வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஒரு குழு வங்கியில் கொள்ளையடிப்பது போல் உருவாக்கப்பட்டிருந்த வெப் சிரீஸின் கதையை பலர் ரசித்து பார்த்தனர்.
இந்த நிலையில் தற்போது மணி ஹெய்ஸ்ட்ஸ் வெப் சிரீஸ் பாகத்தின் 5வது பாகத்தின் முதல் 5 எபிசோட்கள் வரும் செப்.3 ஆம் தேதி நெட் பிளிக்ஸில் வெளியாக உள்ளது
இதனால் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த வெர்வ் லாஜிக் என்ற தனியார் நிறுவனம், வெள்ளிக்கிழமை வெளியாகும் Money Heist season 5 சீரிசை பார்க்க பணியாளர்களுக்கு ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளது.
பலரும் பொய்யான காரணங்களுக்காக விடுப்பு எடுப்பதை தவிர்ப்பதற்காகவே விடுமுறை அளித்திருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அபிஷேக் ஜெயின் கூறியுள்ளார்.
1 comment
[…] […]