அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (வயது 63 ) மாரடைப்பால் இன்று காலமானார்
தமிழகத்தின் முன்னாள் துணை முதல்வரும் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.30 மணி அளவில் உயிரிழந்தார். சமீபத்தில் விஜயலட்சுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை கேட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்