டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரே நாளில் 4 பதக்கங்கள் வென்றுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பில் வீரர்கள் பங்கேற்று அசத்தி வருகின்றனர். இன்று ஒரே நாளில் மட்டும் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி லெகாரா தங்கமும், வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா வெள்ளியும், ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலமும் வென்றிருந்தனர்.
இந்தநிலையில் இவர்களுக்கு பாராட்டு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த ராமதாஸ், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை எனவும், இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான் எனவும் பாராட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்