இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் வலைதளத்தில் பேனரில் விடுதலை போராட்ட தலைவர்களின் படங்களில் நேருவின் படம் இடம்பெறாததை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எச்.ஆர்.சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தனது வலைதளத்தில், மகாத்மா காந்தி, சுபாஸ் சந்திரபோஸ், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தலைவர்களின் புகைப்படங்களில் முன்னாள் பிரதமர் ஜவகர்ஹால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் மோடி அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரத்தின் முன்னோடி குரலான ஜவஹர்லால் நெருவை தவிர்த்து விடுதலையை கொண்டாடுவது அற்பமானது .
வரலாற்றுக்கு முற்றிலும் தவறானது. ஐ.சி.எச்.ஆர். தன்னை இழிவுப்படுத்தும் மற்றொரு சந்தர்ப்பம். இது ஒரு பழக்கமாகி வருகிறது என கூறியுள்ளார்.