ஆப்கானிலிருந்து சுதந்திரமாக பெல்ஜியம் திரும்பிய சிறுமியின் படத்தை பகிர்ந்து அந்நாட்டு பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்த நிலையில், அந்நாட்டு மக்கள், வெவ்வேறு நாடுகளுக்கு வெளியேறி வருகின்றன.
அதுவும் தாலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்கானை விட்டு வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிலிருந்து வெளியேறி பெல்ஜியம் நாட்டிற்கு வந்த சிறுமி, சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் துள்ளி குதித்து ஓடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்த புகைப்படத்தை பகிர்ந்த, பெல்ஜியம் நாட்டு பிரதமர் காய் வெர்ஹாப் ஸ்டாட் மற்ற நாடுகளிலிருந்து தஞ்சமடைவோருக்கு ஆதரவளித்தால், இது தான் விளைவு என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, பெல்ஜியத்திற்கு வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.