தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. இதனால் ஆப்கானிஸ்தானில் தாலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில், தலீபான்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை தங்களுக்கான இணையதளம் மூலம் உலக நாடுகளுக்கு தெரிவித்து வந்தனர்.
ஆங்கிலம், உருது, அரபு, பஷ்டோ, டரி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்த இணையதள பக்கம் உள்ளது. இந்நிலையில், தலீபான் பயங்கரவாதிகளின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு மொழிகளில் உள்ள தலிபான்களின் இணையதள பக்கங்கள் திடீரென முடக்கப்பட்டுள்ளன. முன்னதாக, தலீபான்கள் தொடர்பான பேஸ்புக், வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது தலீபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது