போலந்து வீராங்கனை ஒருவர், ஒலிம்பிக்கில் தனக்கு கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலத்திற்கு விட்டு, 8 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து நாட்டை சேர்ந்த மரியா, ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார்.
இந்த பதக்கத்தை தனது வீட்டில் வைத்து அலங்கரிக்க விரும்பாத அவர், அதனை பயன்படுத்தி பிறருக்கு உதவி செய்ய முன்வந்தார்.
இந்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட, 8 மாதக் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக 2.86 கோடி ரூபாயை பெற போராடுவதை கேள்விப்பட்டுள்ளார். குழந்தைக்கு உதவ முன்வந்த மரியா, தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்திற்கு விட்டுள்ளார்.
இதனை 1.4 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்துக்கொண்ட Żabka சூப்பர்மார்க்கெட் நிறுவனம், மரியாவின் செயலை கண்டு நெகிழ்ந்து போன, அந்த நிறுவனம் வெள்ளி பதக்கத்தை மரியாவிடமே திரும்ப வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளது.