அமெரிக்காவை சார்ந்த வில்லியம் சாட்னர் என்பவர் யானைகளை மையப்படுத்தி return to the forest என்ற ஆவணப்படத்தை எடுத்து ஆகஸ்ட் 12,2012 ஆம் நாள் வெளியிட்டுருந்தார். அன்றைய தினத்தை வருடா வருடம் யானைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்த பூமியில் பூமியில் டைனோசர்களை பார்க்காத மனிதன் கம்பீரமான மிகப்பெரிய விலங்காக மனித இனம் பார்த்து மளைத்து போன விலங்கு யானைகள் .
பெரிய உடல், அதித நியாபக சக்தி கூட்டமாக இருக்கும் குடும்பம் என அழகாக தோன்றும் யானைகளில் 24 வகையான யானைகள் இருந்துள்ளதாகாவும்அதில் 22 வகையான யானைகள் அழிந்து விட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தற்போது ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகள் மட்டுமே உயிரிவாழ்கிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைகளில் யானைகள் அதிகம் வாழ்கின்றன.
யானைகள் ஒரு நாளைக்கு 200 முதல் 250 கிலோ வரையிலான பசுமையான செடி, கொடிகளை ஒடித்து சாப்பிடுகிறது. மீதமுள்ள செடிகளை மற்ற விலங்குகளுக்கு விட்டுவிட்டு செல்கிறது.
கிட்டத்தட்ட 25 முதல் 30 கிலோமீட்டர் வரை நடப்பவை யானைகள் நடந்து காட்டில் வழித்தடம் அமைவதால் காட்டில் உள்ள மற்ற உயிரினங்களும் இவற்றின் வழித்தடத்தை பயன்படுத்தி கொள்கிறது.
யானைகள் ஒரு நாளைக்கு 100 முதல் 130 லிட்டர் வரையிலான தண்ணீரை அருந்துகிறது. யானையின் மூலம் வெளியேறும் சாணம் மூலம் விதைபரவலுக்கு காரணமாகிறது.
யானைகள் ஓரிடத்தில் வாழ்பவை அல்ல. அதே சமயத்தில் ஒரே இடத்தில் இருந்தால் உணவு தட்டுப்பாடு மற்றும் உணவு சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு விடும் நோக்கில் செழுமையான காட்டினை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும்.
அப்போது யானை-மனித மோதல்கள் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வலசை பாதையில் ஏற்படும் இடர்பாடுகளே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை யானை மனித மோதலில் கோவையே முதலிடத்தில் உள்ளது.
1999 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 191 யானை மனித மோதல்கள் நடந்துள்ளன.
இதில் 2017 முதல் 2019 வரை மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தமாக 317 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்து உள்ளது உள்ளதாகவும் அதிகபட்சமாக அசாமில் 62 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றில் தெரியவந்துள்ளது.
யானைகளை புராணங்கள், இதிகாசங்களில் கடவுள் என நினைத்த அதே மனிதன் தான் அன்றிலிருந்து இன்று வரை யானைகளை அழிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.
யானைகளின் எண்ணிகை குறையும் பட்சத்தில், வனங்களும், அதிலுள்ள வன உயிரினங்களும் படிப்படியாக அழியும் ஆரோக்கிய காடுகளின் அளவுகோளே யானைகள்தான் அதற்கு வாழ்வளிக்க வேண்டும் என்பதை விட அதன் பாணியிலேயே வாழ விடுவது தான் வனங்களுக்கும், மனித உயிர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்என்பதுதான் மறுக்க முடியதா உண்மை .