பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

SHARE

குதி போட்டியில் தேர்வாகியும் பெண் என்பதால் மாற்றுத் திறனாளி வீராங்கனை புறக்கணிக்கப்பட்டாரா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடையாலுமூடு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளி மாணவி சமீஹா, இவர் காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும், ஆகஸ்ட்23 முதல் 28 ம் தேதி போலந்து நாட்டில் நடைபெறும் தடகள போட்டியில், பங்கேற்பதற்காக டெல்லியில் நடைபெற்ற தகுதிப்போட்டியில் 12 பேரில் ஒருவராக இவர் தேர்ச்சி பெற்றார்.

ஆனால் மற்றொரு வீராங்கனை தகுதி பெறாததால், தனி ஒருவராக இவரை மட்டும் போலாந்து போட்டிக்கு அழைத்து செல்வது சிரமம் என இந்திய விளையாட்டுக் கழகம் மாணவி சமீஹா நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விளையாட்டுக் கழகத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ந்தொடர்ந்தார் சமீஹா பானு இந்த வழக்கு
நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில் கடந்த ஏழு ஆண்டுகளாக கடும் சிரமங்களுடன் கடும் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், விளையாட்டு கழகத்தின் முடிவினால் அதிருப்தியடைந்துள்ளதாகவும் சமீஹா தெரிவித்தார்

இந்த சம்பவம் குறித்து நீதிபதி, தகுதிப்போட்டியில் தேர்வு பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க அனுமதி மறுப்பதா?- என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக நாளைக்குள் பதில் அளிக்காவிட்டால் நேரடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

தமிழகத்தில் ஒரேநாளில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று – 236 பேர் உயிரிழப்பு

Admin

தமிழகத்தில் சமஸ்கிருத கல்வெட்டியாளர் தேவை என்ன? – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

Admin

10 நிமிடம் தான் டைம்.. வங்கி மெசேஜ் குறித்து காவல்துறை எச்சரிக்கை

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

செயற்கை பண்ணை குட்டை மூலம் விவசாயம் செய்து வரும் சகோதரர்கள்..!!

Admin

நலவாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண உதவி : தமிழக அரசு

Admin

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

ஆண்டுக்கு 28 லட்சம் சம்பளம் வாங்கியவர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை! – காரணம் என்ன?

Leave a Comment