தற்போது சார்பட்டா பரம்பரையில் ஆர்யாவுடன் பசுபதி சைக்கிளில் அமர்ந்து செல்லும் காட்சி குறித்து மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன.
கடந்த மாதம் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் ஒரு காட்சியில் ஆர்யா, தனது வாத்தியாரான பசுபதியை தனது சைக்கிளில் அமர வைத்து அழைத்து செல்வார். பசுபதியிடம் பாக்ஸிங் கற்றுக் கொண்டு வேம்புலியை வெல்ல ராமன் தயாராகும் போது பசுபதி ராமனை திட்டி விடுவார்.
இதனால் அவர் மறுநாள் பயிற்சிக்கு வராமல் வேறு ஒரு வாத்தியாரிடம் பாக்ஸிங் கற்றுக் கொள்வார். இது குறித்து அவரிடம் விசாரிக்க ஆர்யாவுடன் சைக்கிளில் செல்வார் பசுபதி. ஆர்யாவும் பசுபதியும் சைக்கிளில் செல்லும் மீம்தான் தற்போது இணைய்த்தில் ட்ரெண்டிங் என்றே கூறலாம்
அப்படி அவென்ஜர்ஸ் தொடங்கி மெர்சல் வரை பயணம் செய்யும் ஆர்யாவும் வாத்தியார் பசுபதி மீம்ஸ்கள் உங்களுக்காக
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்