திருப்பூரில், அரசு பேருந்தில், கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி பொருத்தி பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த கடந்த மே மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது ஆகவே, தற்போது அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,திருப்பூர் பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்தில் கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாயை பொருத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, அந்த பேருந்து இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கும் அரசு பேருந்து, இரும்பு பைப் உதவியுடன் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும்,கியருக்கு பதிலாக இரும்பு ராடினை பயன்படுத்தும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.