அதிகரிக்கும் கொரோனா காரணமாக சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்பட தடை

SHARE

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் நாளை முதல் அங்காடிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை எவ்வித கூடுதல் தளர்வுகளின்றி நீடிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தற்பொழுது அண்டை மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகிறது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைபடுத்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல் துறை ஆணையாளர் ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெருசந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

எனவே, வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைபடுத்த மாநகராட்சி மற்றும் காவல் துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

சார் அது டைப்பிங் மிஸ்டேக் .. கொங்குநாடு விவகாரம் விளக்கம் கொடுத்த அண்ணாமலை!

Admin

பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சைபர் க்ரைம்!

Admin

குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை… புதிய டிஜிபி சைலேந்திரபாபு

Admin

CSK vs RCB: அரசு என்ன சொன்னாலும் நம்பி விட வேண்டுமா?

Pamban Mu Prasanth

நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment