ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கான கால அவகாசத்தை நீட்டிக்க அனுமதி அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் கோரதாண்டவம் ஆடி வந்த நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் தேவை அதிகரித்தது. ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அரசு அனுமதி வழங்கியது.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் மே 12-ஆம் தேதி இரவு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
இந்தநிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான உச்சநீதிமன்றத்தின் அனுமதி காலம் நிறைவடைந்துள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்க கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றதுஆக்சிஜன் உற்பத்திக்கான கால அவகாசத்தை நீட்டிக்க அனுமதி அளிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசின் கையிருப்பில் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பதாக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.