கீழடி நாகரிகத்தினையும் அகழ்வாராய்ச்சியினையும் கொச்சைப்படுத்தும் வகையில் துக்ளக் எழுதிய கட்டுரை தமிழ் ஆர்வளர்களிடையே வெறுப்பை சம்பாதித்து வருகின்றது.
தனது கட்டுரைக்கு தொல்பொருள் ஆய்வு வெட்டி வேலை என தலைப்பிட்டு எங்கு தோடினாலும் வெறும் மண்டை ஒடுகளும் ஆயுதங்களும்தான் கிடைகின்றன இதை வைத்துக்கொண்டு என்ன செய்வது ஆஸ்திரேலிய மண்ணில் தோண்டினால் கூட இதுதான் கிடைக்கும்.தமிழக அரசின் கீழடி அகழாய்வு ஒரு வெட்டி வேலை என தெரிவித்துள்ளது.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
“கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் சான்றுகள் கிடைத்துவருகின்றன.
தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் மூலம் தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறது.
கீழடியில் கிடைத்த பொருட்களால் தமிழின் தொன்மை கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என தெரியவந்தது.
கிடைத்த சான்றுகளை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழின் தொன்மையால் சிலருக்கு வயிறு எரிவதால், அகழாய்வுகள் தேவையற்றது என எழுதுகிறார்கள்.
தமிழின் பெருமையை ஏற்க மறுக்கும் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது; அவர்களுக்கு வயிறு எரியட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.