வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வருபவரும் லண்டனில் வாழ்ந்து வரும் விஜய் மல்லையாவை திவாலானவர் என்று லண்டன் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையாவை திவால் ஆனவர் என அறிவித்து லண்டன் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்த இந்திய வங்கிகளுக்கு இது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக மல்லையா தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விஜய் மல்லையா திவாலானவராக அறிவிக்கப்பட்டதால் உலகெங்கும் உள்ள மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன.
நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த ஒரு நிறுவனத்தின் இயக்குநராகவோ அல்லது நிறுவனத்தை உருவாக்கவோ முடியாது.
அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதோடு, இந்திய மதிப்பில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவரால் கடன் வாங்கவும் முடியாது .
இந்த நிலையில் மல்லையா பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், கிரடிட் கார்டுகள் மற்றும் சொத்துகள் டிரஸ்டி ஒருவரிடம் ஒப்படைக்கப்படும்.அவற்றை விற்று கடன் கொடுத்தவர்களுக்கு திரும்ப வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.