கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

SHARE

கர்நாடக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பாட்டுள்ளர்.

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று பெங்களூருவில் தனியார் விடுதியில் நடந்த பாஜகவின் சட்டமன்ற குழு கூட்டத்தில் பசவராஜ் பொம்மாய் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்படார்.

இந்த கூட்டத்தில், தர்மேந்திர பிரதாப் மற்றும் எடியூரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர்.

யார் இந்த பசுவராஜ்:

எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளரான பசுவராஜ் கடந்த 2 ஆண்டுகளாக உள்துறை அமைச்சராக பதவி வகித்துவந்தார்.

61 வயதான பாசவராஜ் பொம்மாய் இதற்கு முன்பு 2008 முதல் 2013 வரை கர்நாடகாவில் நடந்த பாஜக ஆட்சியின் போது நீர்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துவந்தார்.

பசவராஜ் பொம்மாயின் தந்தை எஸ்.ஆர். பொம்மாய் கர்நாடகாவின் 11 ஆவது முதல்வராக கடந்த 1996 முதல் 1998 வரை பதவி வகித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு தனது தந்தை மறைவுக்கு பிறகு 2008ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மாய் பாஜகவில் இணைந்தார்.

கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பசவராஜ், நாளை பதவியேற்கவுள்ளார்.

முதல்வராக இருந்த எடியூரப்பா தமது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மூக்கு வழியாக கொரோனா தடுப்பு ஊசி? – மோடி பேச்சின் சுருக்கம் இதோ…

Admin

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

ஆசியாவின் 2ஆவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

Pamban Mu Prasanth

போஸ்ட் போட்டது நீங்கதானே! எச்.ராஜவை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்

Admin

ராஜேந்திர பாலாஜி கம்பி எண்ணுவது உறுதி- அமைச்சர் நாசர்

Admin

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

பாஜகவின் எந்த பெண்ணாவது பாலியல் புகார் கொடுத்துள்ளாரா? – குஷ்புவின் பேச்சால் சர்ச்சை

Admin

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

Leave a Comment