பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

SHARE

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் பொறியியல் படிப்புக்கு சேர விரும்பும் மாணவர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதியும் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு இடஒதுக்கீடு பிரிவில் இடம் பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரையிலும் துணை கலந்தாய்வு அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலும் நடக்க உள்ளது.

ஆதிதிராவிடர் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையும் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

வெளியானது தமிழின் முதல் கணிப்பான் செயலி!.

இரா.மன்னர் மன்னன்

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

புத்தகங்களில் சாதிப் பெயர்களை நீக்கி அடையாளத்தை சிதைக்காதீர்கள்: ராமதாஸ் அறிக்கை

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

“தமிழ் மொழி இனிமையான மொழி”.. சட்டப் பேரவையில் ஆளுநர் புகழாரம்

Admin

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: பரவாயில்ல இன்றும் அதே விலைதான்

Admin

சோனியாகாந்தியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Admin

“PM தோனி, CM விஜய்” – போஸ்டர் மூலம் மதுரையை கலக்கிய விஜய் ரசிகர்கள்

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

Leave a Comment