இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாகுபலி போன்று வலிமையாகியுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
17-வது மக்களவையின் 6-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் 20அமர்வுகளை ஆகஸ்ட் 13-ம் தேதிவரை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றம் வந்தார்.நாடாளுமன்றம் செய்வதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடத்தப்பட உள்ளதாகவும், கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,கொரோனாவை வெல்ல அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார், தடுப்பூசியின் மூலமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.கொரோனாவை எதிர்கொள்ள (பாகு) என்கிறது தடுப்பூசி நமக்கு கிடைத்துள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டால் பாகுபலியாக மாறலாம். இந்தியாவில் 40 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு, பாகுபலி போன்று வலிமையாகியுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார்.