மும்பையினை புரட்டி போட்ட கனமழை .. 17 பேர் உயிரிழப்பு!

SHARE

மும்பையில் கனமழையில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை பெய்த கன மழையினால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மும்பை நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியுள்ளன. வெள்ளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் தற்போது மும்பைக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை விக்ரோலி பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தற்போது வரை செம்பூரின் பாரத் நகர் பகுதியில் 15 பேரும், விக்ரோலியின் சூர் நகர் பகுதியிலிருந்து 9 பேரும் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொண்ட பிரதமர் மோடி, இதில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மிக மோசமான தோல்வி!.

டவ்-தே புயல்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேகதாது அணை கட்டப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.. எடியூரப்பா

Admin

ராகுல் காந்திக்கு பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்.!!

Admin

கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்.. நிதி திரட்டிய கிராம மக்கள்!

Admin

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் ஒன்-பிளஸ் ஸ்மார்ட்போன்…!

Admin

”எங்கள் நாடு இந்தியாதான்… நான் மலாலா அல்ல” – இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை

Pamban Mu Prasanth

கர்நாடக பழங்குடியினரை நடுவழியில் இறக்கி விட்ட லாரி ஓட்டுநர்… கைகொடுத்த தமிழக மக்கள்…

Admin

இந்தியாவில் சுற்றுச்சூழல் அமைச்சகம் உருவாகக் காரணமான சுந்தர்லால் பகுகுணா மறைந்தார் – யார் இவர்?

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

இவை அனைத்தும் திருப்பதிக்கு எடுத்து செல்லத் தடை

Admin

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

Leave a Comment