தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமர் மோடி பாராட்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா 3வது அலைக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பரவலை கட்டுபடுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளது.
மேலும் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் மாநில அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கூடுதல் தொகுப்பாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரிடம் வைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அதிகளவு தடுப்பூசி செலுத்துவது குறித்து பிரதமரே பாராட்டி உள்ளதாக அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்