ஆப்கானிஸ்தான் நடந்துவரும் வன்முறைகளைசேகரிக்க சென்ற இந்திய புகைப்பட செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலுள்ள மும்பையில் வளர்ந்தவர் டேனி சித்திக் பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார்.
இவர் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிய போது மக்கள் சந்தித்த துயரங்களை தனது புகைப்படத்தின் மூலமாக உலகிற்கு தெரிவித்தார்.
குறிப்பாக கங்கை கரைகளில் எரிக்கப்பட்ட பிணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
இதனால் உலக சுகாதார மையம் தொடங்கி அனைத்து சர்வதேச ஊடகத்தின் பர்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியது .
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான்களினால் நடக்கும் அரசியல் மாற்றங்களை செய்தியாக சேகரிப்பதற்கு அங்கு சென்றுள்ளார் டேனி சித்திக்
அதிலும் குறிப்பாக தாலிபான்கள் கந்தகார் பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வருவதை மிகவும் நெருக்கமாக படம் பிடித்து உள்ளார்.
அதில் மூன்று நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் பகுதியில் இராணுவத்தின் மீட்பு மிஷன் ஒன்றில் அவர்களோடு கலந்துகொண்டு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் டேனிஷ் சித்திக் இருந்த வாகனம் தாலிபான்களால் தாக்கப்பட்டது மேலும் இதனை தொடர்ந்து ஆப்கான் படைகள் எவ்வாறு செயல்படுகின்றது , என்பதை உலகிற்கு வெளிச்சம் காட்டுவதற்காக உருக்கமான செய்தி ஒன்றை காட்டினார்.
இந்த நிலையில் ஆப்கான் ராணுவத்தின் மீது தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சித்திக் அந்த தாக்குதலில் பலியாகியுள்ளார்.
இந்த சம்பவமானது உலகம் முழுவதும் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.