முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற 18ஆம் தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்ற பின் கடந்த ஜூன் 17ஆம் தேதி முதன்முறையாக டெல்லி சென்றார்.
டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மேகதாது அணை, நீட் தேர்வு,புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
இந்நிலையில் வரும் 18ம் தேதி இரண்டாவது முறையாக முக ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் .
இந்தச் சந்திப்பின் போது, மேகதாது அணை விவகாரம், நீட் தேர்வு விலக்கு, தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு, மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.