தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய ஊரடங்கில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் என சிவற்றுக்கு தடை உள்ளது.
இந்த ஊரடங்கு 19ம் தேதியுடன் முடியவுள்ள நிலையில், தற்போது சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்