அமெரிக்க படைகள் அவசரப்பட்டு ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறிவிட்டது, இது என் இதயத்தையே பாதிப்பதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைகளும் வெளியேற உள்ளதால் தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றுவிட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது
அமெரிக்காவின் இந்த முடிவை உலக நாடுகள் பல விமர்சித்து வருகின்றன. இது குறித்து முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மக்களை தாலிபான்கள் கொன்று குவிக்கிறார்கள். அங்கு பெண்களும், குழந்தைகளும் பல கொடுமைகளை, கஷ்டங்களை, அனுபவித்து வருகிறார்கள். அனுபவிக்க போகிறார்கள்.
இது என் இதயத்தை நொறுக்குகிறது, என்று புஷ் ஜெர்மன் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.