ஜூலை 4 ஆம் தேதி முதல் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதாக ஹைதராபாத் விஞ்ஞானி விபின் ஸ்ரீவாஸ்தவா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா உலகையே ஆட்டி படைத்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை விரைவில் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கலாம் என ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் விபின் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். அவரின் கருத்து படி:
இந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரம் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது போல, ஜூலை 4-ஆம் தேதியே நாட்டில் மூன்றாம் அலை தொடங்கி இருக்கலாம் என கூறியுள்ளார்.
தற்போது இந்தியாவில் கொரோனா 2 ம் அலை குறைந்து வரும் நிலையில் மருத்துவரின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியினை கொடுத்துள்ளது.