சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடைதான்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

SHARE

ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில மாதமாக சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.‌கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ரஷியா திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘கசேயா’ மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ‘ரான்சம்வேர்’ தாக்குதல் நடத்தப்பட்டது.

இது ஏற்கனவே நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை விட பல மடங்கு பெரிது என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் :

சைபர் தாக்குதல்களை தடுக்க ரஷிய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த நாடு பொருளாதார தடை உள்ளிட்ட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ராணி எலிசபெத்தை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Admin

இன்று நெல்சன் மண்டேலா தினம்!. மண்டேலா குறித்து அறியப்படாத 20 தகவல்கள்…

காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு மோசடி வழக்கில் சிறை! – நடந்தது என்ன?

Admin

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

துப்பாக்கி முனையில் செய்தி வாசித்த பத்திரிக்கையாளர்.. வைரல் வீடியோ

Admin

கல்லாக மாறும் பெண் குழந்தை … அபூர்வ நோயால் போராடும் அவலம்…

Admin

பிப்ரவரி 21: உலகத் தாய்மொழிகள் தினம் உருவாக இந்தியாதான் காரணம் தெரியுமா?

Pamban Mu Prasanth

விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

Admin

வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்த கூகுள்… 22 கோடி யூரோ அபராதம் விதித்த பிரபல நாடு

Admin

ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போன “இல்லாத” சிற்பம்… வடிவேலு பாணியில் நடைபெற்ற சம்பவம்…

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

Leave a Comment