பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

SHARE

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னையில் நடந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை வியாசர்பாடி எம்ஜிஆர் நகரில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது.

இதில் பங்கேற்ற சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி காலில் செருப்பு அணிந்து பங்கேற்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறுகையில், தேர்தலுக்கு முன் ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ எனப் பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து இந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்துள்ளார் என்றும் ,
கருணாநிதி சமாதிக்கு செருப்பு அணியாமல் செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், இந்து கடவுள்களை செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.


இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கூறுகையில், “தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்கலாம்.

ஆனால், கடவுளை அவமதிப்பதுபோல காலில் செருப்பு அணிந்து கொண்டு பூஜையில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

அரசுப்பேருந்து கவிழ்ந்து மாணவன் பலி – நிவாரணம் அறிவித்த முதல்வர்

Pamban Mu Prasanth

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன?

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

வெளிநாட்டு பெண் அளித்த பாலியல் புகாரில் கராத்தே மாஸ்டர் மீது அதிரடி நடவடிக்கை

Admin

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்?

Admin

பேரணிலாம் போக வேண்டாம்… ஊருக்கு போங்க – பிரதமருக்கு அனுமதி மறுத்த மாநகரக் காவல்துறை

Admin

கொமதேக நாமக்கல் வேட்பாளர் மாற்றம்… சாதிய பேச்சுதான் காரணமா?

Admin

Leave a Comment