ஆன்லைன் விளையாட்டிற்கு விளையாட அழைப்பது போல் போலி லிங்க் வழியாக மோசடி செய்யும் மர்ம கும்பலிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
சமீபத்தில் ஆன்லைனின் மோசடிகள் அதிகமாக நடக்கிறது. ஆன்லைன் விளையாட்டு போட்டியில் விளையாடும் நபர்களை குறி வைத்து போலி லிங்க் வழியாக நுழையும்போது அவர்களது செல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் மோசடி கும்பல் திருடி விடுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
காவல்துறை, அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டியும், பாதுகாப்பில்லாத இணையத்தளங்களின் வழியாக எந்தவித ஆன்லைன் போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
கூகுள் அக்கவுண்ட்கள், தகவல்கள் உள்ளிட்டவை திருடப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்குமாறும் கூறியுள்ளனர்.