பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

SHARE

டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிபெரும்பான்மை பெற்று தமிழகத்தில் அரசு பொறுபேற்ற பிறகு, முதன்முறையாக பிரதமர் மோடியை சந்திக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் பன்வாரிலால் புரோகித்.

இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகளை, பிரதமரிடம் எடுத்துரைக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமரிடம், ஆளுநர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஒரே சளி தொல்லை டாக்டர்… தனி ஆளாய் மருத்துவமனைக்கு சென்ற 3 வயது சிறுமி

Admin

பயந்தவங்க காங்கிரஸிலிருந்து வெளியேறலாம் – ராகுல் காந்தி

Admin

டெல்லியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை: காரணம் என்ன?

Admin

கொரோனா வார்டில் செவிலியரிடம் அத்துமீறிய வாலிபர் … ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

Admin

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

ஆம்புலன்ஸ் சைரன் வேண்டாம்!: மணிப்பூர் அரசு உத்தரவு.

குஜராத்துக்கு 1000 கோடி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது “மேஜர் தயான்சந்த் விருது” எனப் பெயர் மாற்றம்..!!

Admin

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் ஏன் தெரியுமா?

Admin

Leave a Comment