வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 பேர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் சமையல் செய்யும் வீடியோவை வெளியிட்டனர்.
முதல் வீடியோவுக்கே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து சமையல் தொடர்பாக பல வீடியோக்கள் பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று அந்த யூடியூப் சேனலுக்கு ஒரு கோடி சப்ஸ்கிரைபர் கிடைத்துள்ளது.
ஒரு கோடி சப்ஸ்கிரைப்களைக் கொண்ட முதல் தமிழ் யூடியூப் சேனல் இன்று பெருமையை பெற்றுள்ளது வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்த யூடியூப் சேனலின் நிர்வாகிகள் 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதிக்கு வழங்கினர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், “வில்லேஜ் குக்கிங் சேனல் அடைந்த உயரத்திற்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழக அரசுக்கு கொரோனா நிவாரணமாக தங்களது பங்களிப்பை அளித்ததற்கும் வாழ்த்துக்கள். மீண்டும் உங்களை சந்திப்பதை எதிர்நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.