சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 1லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது
இந்நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. இன்று சிலிண்டருக்கு 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, முன்பு 825 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர், தற்போது 850 ரூபாய் 50 காசுகளாக விலை உயர்ந்துள்ளது.
இதைப்போல வணிக ரீதியான எரிவாயு சிலிண்டரின் விலையும் 84 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ஆயிரத்து 687 ரூபாய் 50 காசுகளாக உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயுவின் இந்த புதிய விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டதைப் போல சிலிண்டர் விலை 1000 ரூபாயைத் தொடுமோ? – என்ற கேள்வி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளது.
ஏற்கனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.