12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, பல மாநில அரசுகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன.
இந்த நிலையில், தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்த அறிவிப்பு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
மதிப்பெண்கள் வழங்கும் முறை
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத்து முறையில் பெற்ற 20 சதவிகித மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மற்றும் அக மதிப்பீட்டில் இருந்து 30% மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதாத மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் இந்த முறை பள்ளிக்கல்வித்துறை தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என மாணவர்கள் கருதினால்,அவர்களுக்கு தனித் தேர்வு நடத்தப்படும் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.