ஒரு நல்ல நாகரிகமான சமுதாயத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், கருத்து தெரிவித்துள்ள மதுரைக்கிளை நீதி மன்றம்,
தூத்துக்குடியில் எந்தஆயுதமும் இல்லாமல் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது – என்று கூறியதுடன்,
மேலும் ,ஒரு நாகரிகமான சமுதாயத்தில் சம்பவம் நடைபெறுவது ஏற்புடையதா? எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை மற்றும் தமிழக முதன்மைச் செயலாளர் அறிக்கை இரண்டையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும்.
வழக்கு குறித்த மனு மீதான கேள்விக்கு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வுக்கு வழக்கை மாற்றம் செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.