கொரோனா நோய் பயத்தில் பலர் இறக்கும் நிலையில் கொரோனா வைரஸ், பூஞ்சை நோய்கள் தொடர்பான தகவல்களை மிகைப்படுத்தலாமா? என தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசமாக பேசினார்.
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள வசலமர்ரி கிராமத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் தத்தெடுத்துள்ளார்.
இங்கு நடந்த வளர்ச்சி பணிகள் தொடக்க விழாவில் பேசிய அவர்:
கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை, பச்சை பூஞ்சை என விதவிதமான நிறங்களில் பூஞ்சை நோய் வருவதாக கூறுகின்றனர்.
உண்மையில் அது உள்ளதா? இல்லையா? என்பது கூட முழுமையாக தெரியவில்லை. இதுபோன்ற தகவல்கள் வேகமாக பரவ விடுகிறார்கள். இதனால், நோய் பயத்திலேயே பலர் இறந்து விடுவதாக கூறினார்.
ஆகவே உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகள் உள்ள இந்த சமயத்தில் பூஞ்சை நோயினை வைத்து மிகைப்படுத்தி அவர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.