சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 9. ’24 வகை தொழிற்கை முத்திரைகள்’ – ஒரு நினைவூட்டல்.

SHARE

நமது சிற்ப இலக்கணம் தொடரில், இதுவரை 24 வகை கை முத்திரைகளைப் பார்த்தோம்.. 

இவற்றில் நீங்கள் நிபுணத்துவம் பெற்றால்தான் இனிவரும் பகுதிகளை உங்களால் சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலும் என்பதால், இங்கே தொகுப்பாய் ஒரு நினைவூட்டல்.

படிமங்களில் ஒற்றைக் கை அமைக்கும் முத்திரைகளை ’தொழிற் கை முத்திரைகள்’ என்று கூறுவர்.

இம்முத்திரைகளை நன்கு கவனித்து பயிற்சி எடுங்கள்.

அபய மற்றும் வரத முத்திரைகளை காக்கும் மற்றும் வழங்கும் முத்திரை என்பார்கள். பொதுவாய் சிற்ப படிமங்களின் வலது கை அபய முத்திரையாகவும் இடது கை வரதமுத்திரையாகவும் அமையும்.

வியாக்யான முத்திரை என்று சொல்லப்படும் சின்முத்திரை யோகத்தையும் ஞானத்தையும் கற்பித்தலைக்  குறிக்கும்.

சூசி முத்திரையும், தர்ஜனீ முத்திரை இரண்டும் ஒன்று போலவே இருந்தாலும்… சுட்டு விரல் செங்குத்தாக இருந்தால் சூசி முத்திரை. சுட்டு விரல் சற்று சாய்ந்திருந்தால் தர்ஜனீ முத்திரை.

கடி ஹஸ்தமும், ஊரு ஹஸ்தமும் ஒரே மாதிரி இருந்தாலும் சற்று வேறுபாடு உண்டு. 

விஸ்வமயம் எனப்படும் வியப்பு முத்திரை பெரும்பாலும் துவார பாலகர் படிமங்களிலேயே வரும். விஸ்வமய முத்திரையில் விரல்கள் விரிக்கப்பட்ட புறங்கை வடிவமே நம் கண்களுக்குத் தெரியும்.,

விரல்கள் விரிக்கப்பட்ட உள்ளங்கை வடிவம் அலபத்ம ஹஸ்தம். விரிந்த தாமரை மலர் போன்ற வடிவம். இது மகிழ்ச்சியைக் குறிக்கும். பல்லவ ஹஸ்தம் எனப்படும் தளிர்க்கை ரிஷபாந்திகர் மூர்த்தத்தில் வரும்.

கடக ஹஸ்தம் மற்றும் கர்த்தரி ஹஸ்தம். இவ்விரண்டு முத்திரைகளில்தான் பெரும்பாலும் ஆயுதங்கள்  இருக்கும்.

தாடன ஹஸ்தம் தண்டித்தலைக் குறிக்கும்.

ஆலிங்கன ஹஸ்தம் உமாசகிதர் மூர்த்தங்களிலே வரும்.

சிகர ஹஸ்தம் மற்றும் தனூர் ஹஸ்தம் வில் ஒன்றை பிடிப்பதற்கே வரும்.

உடுக்கை பிடிக்கு டமரு ஹஸ்தம் என்று பெயர்.

அக்னி சட்டியை ஏந்திய கரம் அர்த்த சந்திர ஹஸ்தம்

புத்தர் படிமத்தில் பூ ஸ்பரிச முத்திரை காணப்படும் – இவற்றைப் படிக்கும் போது உரிய சிற்பங்களை உங்களால் நினைவுக்கு கொண்டுவர முடிகின்றதா? – என்று பார்க்கவும்.

உங்களுக்கு உதவ, மீண்டும் ஒருமுறை படங்களை இங்கு கொடுக்கிறோம்…

தொடரும்…

  • மா.மாரிராஜன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கீழடியில் தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுப்பு.!!

Admin

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

பிக்பாஸ் நாட்கள்: நாள் 2. எல்லாமே கதையா கோப்பால்?

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 2

Pamban Mu Prasanth

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

Admin

கீழடியில் கிடைத்த சிற்பம் – ஆணா? பெண்ணா?

Admin

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு.. தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும் : பேரவையில் ஸ்டாலின் முழக்கம்

Admin

கீழடியில் 13 எழுத்துகளை கொண்ட பானை ஓடு கண்டெடுப்பு.!!

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

தொல்லியல் அறிஞர்களை ஈர்க்கும் மீனவர் வீடு – யார் இந்த பிஸ்வஜித் சாஹு?

Pamban Mu Prasanth

கீழடியின் கொடை குறைவதில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்

Admin

Leave a Comment