தமிழகத்தில் புதிதாய் அமைந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கே.என்.நேரு, ஊராட்சிகள் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்