நீட் தேர்வின் தாக்கம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க நாளையுடன் முடிவடைகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கத்தினை ஆய்வு செய்து அறிக்கை வழங்கிட தமிழக அரசு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 8 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை தமிழக அரசு நியமித்திருந்தது.
மேலும், நீட் தேர்வு குறித்து பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவோ நேரடியாகவோ மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனி பெட்டியில் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று வரை 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வந்த கருத்தில் பெரும்பாலும் நீட் வேண்டாம் என பலர் தெரிவித்துள்ளதாக நேற்று நீதியரசர் ராஜன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு நாளை மாலையுடன் அவகாசம் முடிவடைய இருக்கிறது.