சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் தேர்வு நடத்தப்படாமல் எப்படி கணக்கிடப்படும் என்ற புதிய மதிப்பீட்டு முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதுதொடா்பான மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் 10, 11, 12ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கிட்டு வழங்க அங்கீகாரம் வழங்கியது.
மேலும், மதிப்பெண் மதிப்பிடுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்