கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரொனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியினை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத பொதுமக்கள் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளது சர்சையினை கிளப்பியுள்ளது.
கொரோனா பரவல் தொடர்பாக நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டே.
நாட்டில் தற்போது நெருக்கடி நிலை நிலவுகிறது தேசிய அவசரநிலை உள்ள நிலையில் நீங்கள் தடுப்பூசி போட விரும்பவில்லை என்றால், நான் உங்களை கைது செய்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும என கூறினார்.
மேலும், தடுப்பூசி போட விருப்பமில்லாத நபர்கள் பிலிப்பைன்ஸை விட்டு வெளியேறுங்கள் என கூறியுள்ளார் அதிபரின் இந்த அறிவிப்பு அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியினையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.