சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிப்பதில் சிக்கல்… சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல்

SHARE

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை இன்று காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிவசங்கர் பாபாவின் மருத்துவ அறிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் குழந்தைகளிடம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து மாணவிகள் 3 பேர் நேரடியாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், டெல்லி காசியாபாத்தில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து செங்கல்பபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் காரணத்தினால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லை எனக்கூறி அது தொடர்பான மருத்துவ அறிக்கையையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

சிவசங்கர் பாபா சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Admin

பெற்றோரை இழந்த குழந்தைகள்.. வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்பு நிதி

Admin

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

தமிழக அரசின் திட்டத்தை கேலி செய்து… சர்ச்சை கார்டூன் வெளியிட்ட துக்ளக்!

Admin

நீட் தேர்வு பாதிப்பு: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

Admin

எம்ஜிஆரை தவறாக சித்தரிப்பதா..? கோபமானமுன்னாள் அமைச்சர்

Admin

மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக சிவசங்கர் பாபாவின் பெண் பக்தர் அதிரடி கைது

Admin

12 -ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பெண் கணக்கீடு எப்படி?முதல்வர் அதிரடி அறிவிப்பு

Admin

கொரோனா கட்டளை மையங்கள் – தொடர்பு எண்கள் வெளியாகின.

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

உங்கள் நடவடிக்கை சூப்பர் : முதல்வரை பாராட்டிய உயர்நீதிமன்றம் காரணம் என்ன?

Admin

7 பேர் விடுதலையை காங்கிரஸ் ஆதரிக்காது – கே.எஸ்.அழகிரி

Leave a Comment